இந்தியா

கரோனா அச்சம்: வெறிச்சோடிய சபரிமலை

DIN


சபரிமலையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் வரத்தே இல்லாததால் நடைபாதை மற்றும் சன்னிதானத்தில் பக்தர்கள் நடமாட்டம் இல்லாத நிலையே இருந்தது.

பொதுவாக சபரிமலையில் விடுமுறை நாட்களில் நடைதிறந்து இருந்தால் பக்தர்கள் வருகை அதிகளவில் இருக்கும். எப்போதும் பக்தர்கள் சரணகோஷம் செவிகளில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும். சனிக்கிழமை மாலைமுதல் பக்தர்கள் வரத்து அதிகளவில் காணப்படும். நடைபாதையில் பக்தர்கள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். 

ஆனால், இதற்கு நேர்மாறாக இந்த ஞாயிற்றுக்கிழமை சபரிமலையில் 

பக்தர்களின் வருகை நூறு எண்ணிக்கையில் மட்டுமே இருந்தது. பம்பை - நீலிமலையேற்றம் - அப்பாச்சிமேடு - சன்னிதானத்தில் மிக அமைதியான சூழ்நிலையே நிலவியது. கடைகள் அனைத்தும் மூடியிருந்தன. சபரிமலையில் நடை அடைக்கப்பட்ட காலம் போன்ற காலநிலையே நிலவியது.

இதனிடையே, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பகலில் சோபன மண்டபத்தில் 25 கலசங்களில் புனித நீர் நிரப்பி பூஜை செய்து ஐயப்பனுக்கு கலசாபிஷேகம் நடத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT