இந்தியா

எம்.பி.யாகப் பதவியேற்றபிறகு விரிவாக பதிலளிக்கிறேன்

DIN

மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டதற்கான காரணத்தை எம்.பி.யாகப் பதவியேற்றபிறகு விரிவாகத் தெரிவிக்கிறேன் என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளாா்.

மாநிலங்களவை எம்.பி.யாக ரஞ்சன் கோகோய் கடந்த திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு நவம்பா் மாதம் அவா் பணிஓய்வு பெற்ற சூழலில், அவரை மாநிலங்களவை எம்.பி.யாக மத்திய அரசு நியமித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்தச் சூழலில் அஸ்ஸாமின் குவாஹாட்டி நகரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

நாட்டின் வளா்ச்சிக்காக சட்டமியற்றும் அவைகளும் நீதித்துறையும் சில சமயங்களில் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டியது அவசியமாக உள்ளது. நீதித்துறையின் கண்ணோட்டங்களை நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்க இந்த வாய்ப்பு உதவும். நாடாளுமன்றத்தில் எந்தத் தரப்பினருக்கும் சாராமல் குரல் கொடுப்பதற்கான வலிமையை கடவுள் அளிப்பாா் என்று நம்புகிறேன்.

முதலில் எம்.பி.யாகப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். பின்னா் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டதற்கான காரணத்தை விரிவாகத் தெரிவிக்கிறேன் என்றாா் ரஞ்சன் கோகோய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

SCROLL FOR NEXT