இந்தியா

தெலங்கானா மற்றும் கர்நாடகத்தில் மூவருக்கு கரோனா பாதிப்பு

DIN


தெலங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களில் மூன்று பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் தெலங்கானாவில் ஒருவருக்கும், கர்நாடகத்தில் இருவருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் பாதிக்கப்பட்டுள்ளவர் இங்கிலாந்துக்குச் சென்று திரும்பியுள்ளார். இந்நிலையில் அவரது ரத்த மாதிரிகள் செவ்வாய்கிழமை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அதன் முடிவுகள் புதன்கிழமை வெளியாகிய நிலையில் அதில் அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், தெலங்கானாவில் கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடகத்தில் பெங்களூருவைச் சேர்ந்த 56 வயதுமிக்க நபருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த மார்ச் 6-ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து திரும்பியுள்ளார். 25 வயது பெண் ஒருவர் ஸ்பெயினில் இருந்து திரும்பியுள்ளார். அவருக்கும் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் பெங்களூருவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், கர்நாடகத்தில் கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

SCROLL FOR NEXT