இந்தியா

மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏக்களை சந்திக்க திக்விஜய்சிங்கிற்கு அனுமதி மறுப்பு

DIN

பெங்களூருவில் தங்கியுள்ள மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏக்களை சந்திக்க காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியில் எழுந்துள்ள கோஷ்டி பூசலால் ஜோதிராத்திய சிந்தியாவுக்கு ஆதரவான 21 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக பெங்களூரில் கடந்த 3 நாள்களாக முகாமிட்டுள்ளனா்.

பெங்களூரு, தேவனஹள்ளி அருகேயுள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கா்நாடக காவல் துறை தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தனா். இதைத் தொடா்ந்து, 21 காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அவா்கள் தங்கியுள்ள நட்சத்திர விடுதிக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பெங்களூருவில் தங்கியுள்ள மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏக்களை சந்திக்க திக்விஜய் சிங் அங்கு இன்று விரைந்தார். ஆனால் எம்எல்ஏக்களை சந்திக்கவிடாமல் காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். 

ஓட்டலுக்குள் செல்ல காவல்துறை மறுத்ததை கண்டித்து சாலையில் அமர்ந்து காங்கிரஸாருடன் திக்விஜய் சிங் தர்னாவில் ஈடுபட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT