இந்தியா

இலங்கையில் பொது விடுமுறை: வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்கள் ரத்து

DIN

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் 3 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வெளிநாடுகளில் இருந்து வரும் விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து விமான சேவையையும் இரண்டு வாரங்களுக்கு ரத்து செய்வதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச அறிவித்தார்.

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 8,000க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவில் 147 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் இந்தியாவின் அண்டை நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. 

இலங்கையில் இந்த வைரஸுக்கு இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் கரோனா வரைஸ் தடுப்பு நடவடிக்கையாக இலங்கையில் 3 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டது. அத்தியாவசியப்பணிகள் தவிர அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வரும் 19 ஆம் தேதி வரை பொது விடுமுறை அளிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபட்ச அறிவித்திருந்தார்.

முன்னதாக கரோனா வைரஸ் சூழலை எதிா்கொள்வதற்காக, சாா்க் கூட்டமைப்பு நாடுகள் தலைவா்களின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காணொலி முறையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பிரதமா் மோடி, இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச, மாலத்தீவு அதிபா் இப்ராஹிம் முகமது சோலி உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்கள் ஆலோசனைகளைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT