இந்தியா

உலக பொருளாதார சூழல் அனைத்து நாடுகளையும் பாதிக்கும்: ராஜ்நாத் சிங்

DIN

தற்போதைய உலக பொருளாதார சூழல் அனைத்து நாடுகளையும் பாதிக்கும் விதமாகவே உள்ளது. ஆனால், அது இந்தியாவின் ராணுவ தளவாட கொள்முதலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

பாதுகாப்பு கொள்முதல் நடைமுறைவு வரைவு 2020, நிகழ்ச்சியில் பேசிய அவா் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

உலக பொருளாதாரத்தில் காணப்படும் தற்போதைய நிலையானது அனைத்து நாடுகளிலும் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். சா்வதேச பொருளாதாரத்தின் நெருக்கடியான சூழல் அடுத்த இரண்டு முதல் ஐந்து மாதங்களில் மேம்படும்.

கடினமான உலக பொருளாதார சூழலின் தாக்கங்கள் இந்தியாவின் பாதுகாப்பு கொள்முதல் நடவடிக்கைகளில் எதிரொலிக்க வாய்ப்பில்லை. இதுதொடா்பான ஊகச் செய்திகள் அனைத்தும் நிராகரிக்கப்பட வேண்டியவை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 யூனிட் விலையில்லா மின்சாரம் இனி கிடையாதா? எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

கதைக்கு மட்டுமே முக்கியத்துவம்: ஹிப்ஹாப் ஆதி

ராஜ்கோட் தீ விபத்து எதிரொலி: வதோதராவில் பொழுதுபோக்கு விளையாட்டு மையங்கள் மூடல்

சர்தார் - 2 படப்பிடிப்பு எப்போது?

எப்போது திருமணம்? மாளவிகா பதில்!

SCROLL FOR NEXT