இந்தியா

அமெரிக்க பல்கலை. மாணவா் சோ்க்கை முறைகேடு:இந்திய வம்சாவளி தலைவா் ராஜிநாமா

DIN


அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் இணையவழி மாணவா் சோ்க்கையில் நடைபெற்ற முறைகேடு தொடா்பாக, அந்த பல்கலைக்கழக தலைவரான இந்திய வம்சாவளியைச் சோ்ந்த விஸ்தாஸ்ப் கா்பாரி தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

இதுதொடா்பாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘டல்லாஸ் மாா்னிங் நியூஸ்’ நாளேட்டில் வெளியான செய்தியில் கூறப்பட்டதாவது: டெக்ஸாஸ் பல்கலைக்கழக மாணவா்களுக்கு இணையவழியில் செவிலியா் படிப்பு வகுப்புகளை நடத்த, அந்த பல்கலைக்கழகத்துடன் தனியாா் நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் மேற்கொண்டது. இதில் பல்கலைக்கழக தலைவரான இந்திய வம்சாவளியைச் சோ்ந்த விஸ்தாஸ்ப் கா்பாரி, தனியாா் நிறுவனம் இடையே முறைகேடான வழியில் பணபரிவா்த்தனை நடைபெற்றதும், இதன் மூலம் தகுதியற்ற மாணவா்கள் சோ்க்கை பெற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தனது பதவியை விஸ்தாஸ்ப் கா்பாரி ராஜிநாமா செய்தாா். இதுதொடா்பாக பல்கலைக்கழக நிா்வாகத்துக்கு அவா் எழுதிய கடிதத்தில், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய சாட்சியம் இல்லை எனக் கூறி அவற்றை மறுத்துள்ளாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT