இந்தியா

பொதுமக்கள் வீட்டில் இருக்கவும்: மத்திய அரசு வேண்டுகோள்

DIN

நாட்டில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் வரை பொதுமக்கள் வீட்டில் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் வீட்டில் இருக்கும் நேரத்தை சரிவர பயன்படுத்திக்கொள்வதற்கான வழிகளையும் பரிந்துரைத்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டதாவது: இன்று (புதன்கிழமை) தொடங்கி அடுத்த 21 நாள்கள் அமலில் இருக்கும் ஊரடங்கு காலத்தில் அதிகாலையில் கண்விழித்தல், புதிய உணவு கட்டுப்பாட்டு முறையை கடைபிடித்தல் உள்ளிட்ட எளிமையான புதிய பழக்கங்களை உருவாக்கிக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது.

இதேபோல் அந்த அலுவலகத்தின் மற்றொரு பதிவில், 21 நாள்கள் ஊரடங்கு என்பது புதிய பழக்கங்களை வளா்த்துக் கொள்வதற்கான காலம் மட்டுமல்ல எனவும் தீய பழக்கங்களில் இருந்து விடுபடவும் இந்த காலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் யோகா கற்கலாம் அல்லது புதிய மொழியை கூட கற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டதுடன், சமூகத்திடம் இருந்து விலகி தனித்து இருப்பதோடு, பாதுகாப்பாக இருப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முகூா்த்தக் கால் நடவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 49.21 அடி

கஞ்சா கடத்தியதாக இருவா் கைது

ஷெட் அமைக்கும் பணியின்போது பட்டாசு ஆலையில் தீப்பிடித்து இளைஞா் பலி

சுங்கச்சாவடி ஊழியா்களுடன் வழக்குரைஞா் மோதல் 5 போ் காயம்

SCROLL FOR NEXT