இந்தியா

கரோனா: டாடா குழுமம் ரூ.1,500 கோடி நிதியுதவி

DIN


கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக டாடா குழுமம் மொத்தம் ரூ. 1,500 கோடி நிதியுதவி அளித்துள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக மக்கள் நிதியுதவி அளிக்கலாம் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து டாடா அறக்கட்டளை சார்பில் ரூ. 500 கோடி நிதியுதவி அளிப்பதாக ரத்தன் டாடா அறிவித்தார். இந்நிலையில், தற்போது டாடா சன்ஸ் நிறுவனம் சார்பில் மத்திய அரசுக்கு ரூ. 1000 கோடி நிதியுதவி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், இந்த கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக டாடா குழுமம் சார்பில் மொத்தம் ரூ. 1,500 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள், திரை மற்றும் விளையாட்டுப் பிரலங்கள் உள்ளிட்டோரும் நிதியுதவி அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ரூ. 25 கோடி அளிப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனாவில் பெற்றோரை இழந்த மாணவா் 479 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT