இந்தியா

பானிபூரி, கசாயம் செய்வது எப்படி? கூகுள், யூடியூப்பில் தேடிய இந்தியர்கள்

DIN


புது தில்லி: கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், வீட்டுக்குள் முடங்கியிருக்கும் மக்கள் ஏராளமானோர் தங்களுக்கு மிகவும் பிடித்த பானிபூரி மற்றும் கசாயம் செய்வது எப்படி என்று கூகுள் மற்றும் யூடியூப்பில் தேடியிருக்கிறார்கள்.

பானிபூரி செய்வது எப்படி என்று தேடியிருப்பது 107% அதிகரித்திருப்பதாகவும், கரோனா தொற்றில் இருந்து காத்துக் கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருந்ததை அடுத்து ஆயுர்வேத மருந்தான கசாயம் (பல்வேறு வகையான கசாயங்கள்) செய்வது எப்படி என்று தேடிய இந்தியர்களின் எண்ணிக்கை 90% அதிகரித்திருப்பதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.

உணவகங்கள், கிளப்புகள், தெருவோரக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டதால், தங்களுக்குப் பிடித்த உணவுகளை வீட்டிலேயே செய்து சாப்பிடும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், 5 நிமிடத்தில் செய்யும் உணவுகள் என்று இன்டர்நெட்டில் 56 சதவீதம் மக்கள் தேடியுள்ளனர். ஒட்டுமொத்தமாக சமையல் செய்யும் விடியோக்களை யூடியூப்பில் தேடுவோரின் எண்ணிக்கை 20% அதிகரித்துள்ளதாகவும் கூகுள் இந்தியா தெரிவித்துள்ளது.

மேலும், ஆன்லைனில் மின்கட்டணத்தை செலுத்துவது எப்படி? போன்ற கேள்விகளை எழுப்புவோரின் எண்ணிக்கை 180% அதிகரித்துள்ளது.

அதேப்போல எனக்கு அருகே என்ற வார்த்தையைப் பயன்படுத்தி அதிக தேடுதல்கள் நடந்துள்ளன. எனக்கு அருகே இருக்கும் மருந்தகம், எனக்கு அருகே இருக்கும் காய்கறி கடை என தேடுவோரின் எண்ணிக்கை 550 சதவீதமாக அதிகரித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

SCROLL FOR NEXT