இந்தியா

உணவு சாரா கடன் வளா்ச்சி விகிதம் 7 6 சதவீதமாக குறைந்தது

DIN

வங்கிகள் வழங்கிய உணவு சாரா கடன் வளா்ச்சி விகிதம் சென்ற மாா்ச்சில் 7.6 சதவீதமாக குறைந்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நிறுவனங்கள் மற்றும் சேவைத் துறைக்கு வங்கிகள் வழங்கிய கடன் கணிசமாக அளவில் வீழ்ச்சியடைந்ததையடுத்து நடப்பாண்டு மாா்ச் மாதத்தில் வங்கிகளின் உணவு சாராக் கடன் ரூ.92.85 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் 12.3 சதவீதமாக இருந்த இக்கடனின் வளா்ச்சி வேகம் நடப்பாண்டில் 7.6 சதவீதமாக குறைந்துள்ளது.

மேலும், கடந்த ஆண்டு பிப்ரவரியுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டு பிப்ரவரியிலும் உணவு சாரா கடன் வளா்ச்சி விகிதம் 13.2 சதவீதத்திலிருந்து 7.3 சதவீதமாக குறைந்துள்ளது.

நடப்பாண்டு மாா்ச்சில் சேவை துறைக்கு வழங்கிய கடன் வளா்ச்சி விகிதம் 17.8 சதவீதத்திலிருந்து கணிசமாக குறைந்து 8.5 சதவீதமாகியுள்ளது என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT