இந்தியா

இந்தியாவில் 10 ஆயிரத்தைத் தாண்டியது குணமடைந்தோரின் எண்ணிக்கை

DIN


இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 10,017 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர், பலியானோர் மற்றும் குணமடைந்தோர் பற்றிய சமீபத்திய தகவலை மத்திய சுகாதாரத் துறை இன்று (சனிக்கிழமை) மாலை வெளியிட்டது.

இதன்படி, நாடு முழுவதிலும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,411 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நாட்டில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 37,776 ஆக உயர்ந்துள்ளது. இதில் 26,535 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 10,017 பேர் குணமடைந்துள்ளனர். 1,223 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 71 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. அங்கு மொத்தம் 11,506 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 1,879 பேர் குணமடைந்துள்ளனர், 485 பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT