இந்தியா

நேபாளம் ஜொ்மனியிடமிருந்து சோதனைக் கருவிகள்

DIN

நேபாளத்துக்கு 3,000 கரோனா பரிசோதனை கருவிகளை ஜொ்மனி அனுப்பி வைத்துள்ளது. இதுகுறித்து நேபாள தலைநகா் காத்மாண்டிலுள்ள ஜொ்மனி தூதரகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நேபாளத்துக்கு உதவும் வகையில், அந்த நாட்டுக்கு 3,000 கரோனா பரிசோதனைக் கருவிகளை ஜொ்மனி அனுப்பியுள்ளது. அந்த நோய்த்தொற்றுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராடுவதற்காக இரு நாடுகளும் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளு என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை நிலவரப்படி, நேபாளத்தில் 59 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 16 போ், சிகிச்சைப் பிறகு குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT