இந்தியாவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 42,533 ஆக உயர்வு
இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 42,533 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாஇந்தியாவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 42,533 ஆக உயர்வு
இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 42,533 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 42,533 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, 21 நாள் தேசிய ஊரடங்கை கடந்த மாா்ச் மாதம் 24-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா். மாா்ச் 25-ஆம் தேதி தொடங்கிய இந்த ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி நிறைவடையவிருந்தது.
ஆனால், கரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வராததைத் தொடா்ந்து, மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 42,533 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
1,373 பேர் பலியாகி உள்ளனர். 29,453 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11,707 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக பாதிப்பு மகாராஷ்டிரத்தில் ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 12,974 பாதிக்கப்பட்ட நிலையில் 548 பலியாகியுள்ளனர்.