முகப்பு
இந்தியா

கரோனா: இந்தியாவில் பாதித்தோரின் எண்ணிக்கை 46,433-ஆக உயர்வு

இந்தியாவில் கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 42,836-லிருந்து 46,433-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:35 PM
பகிர்:

இந்தியாவில் கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 42,836-லிருந்து 46,433-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கரோனா வைரஸ் தொற்று பரவலால், மாா்ச் 25-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏப். 14-ஆம் தேதி வரையில் முதல் கட்டமாகவும், அந்த நாளில் இருந்து மே 3-ஆம் தேதி வரை 2-ஆம் கட்டமாகவும், மே 4 முதல் 17 வரையில் 3-ஆம் கட்டமாகவும் ஊரடங்கு செயல்படுத்தப்படுகிறது. எனினும் இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அந்த வைரஸால் 3900 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்துடன் நாட்டில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 42,836-லிருந்து 46,433-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 195 பேர் பலியாகியுள்ளனர். 

இத்துடன் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 1,389-லிருந்து 1,568-ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11,762-லிருந்து 12,727-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் இதுவரை 14,541 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →