முகப்பு
இந்தியா

வாட்ஸ் அப் மூலம் சிறுவர்களுக்கு போதைப்பொருள் விற்ற பெண் கைது

வாட்ஸ் அப் மூலம் சிறுவர்களுக்கு போதைப்பொருள் விற்ற பெண் தில்லியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Updated On : 10 மே, 2020 at 5:13 PM
கோப்புப்படம்
பகிர்:

புது தில்லி: வாட்ஸ் அப் மூலம் சிறுவர்களுக்கு போதைப்பொருள் விற்ற பெண் தில்லியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளதாவது:

தில்லியின் முகர்ஜி நகர் , ரஜோரி கார்டன் பகுதியைச் சேர்ந்த பெண் (வயது 45) ஒருவர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். இவர் பணம் படைத்தவர்களின் வீட்டு இளம்பருவ குழந்தைகளை சேர்த்து வாட்ஸ் அப் குழு ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதன்மூலம் அப்பெண் அவர்களுக்கு ஈ.சிகரெட் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருள்களை விற்பனை செய்துள்ளார். அதற்கான பணத்தினை பே டி எம் மூலம் பெற்றுக்கொள்ளும் அவர் பின்னர் பொருளை நேரடியாக வந்து  கொடுத்து விடுவார்.

Advertisement

இதுதொடர்பாக தகவல் கிடைத்தவுடன் சிறுவன் ஒருவனுக்கு போதைப்பொருளை அளிக்க வந்தவரை கையும் களவுமாக பிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளோம்.

அந்தப் பெண்ணின் கணவர் ஏற்றுமதி  இறக்குமதி தொழில் செய்துவருவதாகத் தெரிய வந்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது

இவ்வாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.