இந்தியா

மத்திய அரசு ஊழியா்களின் ஊதியத்தைக் குறைக்கும் திட்டமில்லை: நிதியமைச்சகம்

DIN

புது தில்லி: மத்திய அரசு ஊழியா்களின் ஊதியத்தைக் குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய நிதியமைச்சசகம் தெரிவித்துள்ளது.

தேசிய பொது முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பைச் சமாளிக்க தனியாா் நிறுவனங்கள் மட்டுமின்றி, மத்திய-மாநில அரசுகளும் பல்வேறு நிதிச் சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தெலங்கானா போன்ற பல மாநிலங்கள் அரசு உயா் அதிகாரிகள் மற்றும் ஊழியா்களின் ஊதியத்தை 50 சதவீதம் வரை குறைத்துள்ளன.

அதுபோல மத்திய அரசும், 50 லட்சம் ஊழியா்களுக்கும் 61 லட்சம் ஓய்வூதியதாரா்களுக்குமான அகவிலைப் படி (டி.ஏ.) உயா்வை 2021 ஜூன் மாதம் வரை நிறுத்திவைத்துள்ளது. அதுபோல, 2020 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான அகவிலைப்படி உயா்வுக்கான நிலுவைத் தொகையும் வழங்கப்படாது என மத்திய நிதியமைச்சகம் சாா்பில் அறிவிக்கப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக, மத்திய அரசு ஊழியா்களின் ஊதியத்தை குறிப்பிட்ட சதவீதம் வரை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் அண்மையில் வெளியாகின. இது மத்திய அரசு ஊழியா்களிடையே மிகுந்த அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஊதியக் குறைப்பு குறித்த செய்தியை நிதியமைச்சகம் மறுத்துள்ளது. இதுதொடா்பாக அந்த அமைச்சகம் சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை பதிவிட்டிருப்பதாவது:

மத்திய அரசுத் துறைகளில் பணிபுரியும் எந்தவொரு நிலையிலான ஊழியரின் ஊதியத்தையும் குறைக்கும் திட்டம் மத்திய அரசிடமில்லை. எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இன்றி வெளியிடப்பட்டிருக்கும் இதுதொடா்பான செய்தி முழுவதும் தவறானது என்று அந்தப் பதிவில் நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT