இந்தியா

கரோனா: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், மேற்கு வங்கம் நிலவரங்கள்

DIN


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவலை ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் வெளியிட்டுள்ளன.

ராஜஸ்தான்:

இரவு 9 மணி நிலவரப்படி, ராஜஸ்தானில் இன்று மட்டும் 138 பேருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 4,126 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,555 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தம் 117 பேர் பலியாகியுள்ளனர்.

மத்தியப் பிரதேசம்:

மத்தியப் பிரதேசத்தில் இன்று மேலும் 201 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 4 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 3,986 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,901 பேர் சிகிச்சையில் உள்ளனர், 1,860 பேர் குணமடைந்துள்ளனர், 225 பேர் பலியாகியுள்ளனர். 

குஜராத்:

குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 362 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 8,904 ஆக உயர்ந்துள்ளது. இதில், 3,246 பேர் குணமடைந்துள்ளனர், 537 பேர் பலியாகியுள்ளனர். 

மேற்கு வங்கம்:

மேற்கு வங்கத்தில் இன்று புதிதாக 110 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2,173 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,363 பேர் சிகிச்சையில் உள்ளனர், 126 பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT