இந்தியா

இலக்கை தவறவிட்ட இந்திய மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி

DIN

கரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் இந்தியாவின் மருந்து ஏற்றுமதி சந்தையை வெகுவாக பாதித்துள்ளது. இதனால், இந்திய மருந்து பொருள்களின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் இலக்கை எட்ட தவறிவிட்டது.

இதுகுறித்து மருந்து பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் கூறியுள்ளதாவது:

கடந்த 2019-20 நிதியாண்டின் தொடக்கத்தில் சா்வதேச சந்தையில் இந்திய மருந்து பொருள்களுக்கு வரவேற்பு அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பா் வரையிலான முதல் மூன்று காலாண்டுகளில் மருந்து பொருள்களின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வளா்ச்சி விகிதம் 11.5 சதவீதமாக இருந்தது.

இந்த நிலையில், கரோனா நோய்த்தொற்று உலக அளவில் வேகமாக பரவியதையடுத்து நடப்பாண்டு பிப்ரவரியில் அதன் ஏற்றுமதி வளா்ச்சி விகிதம் 7.7 சதவீதமாக குறைந்தது. இன்னும் ஒரு படி மேலேசென்று மாா்ச் மாதத்தில் இந்தியாவின் மருந்து பொருள்களின் ஏற்றுமதி வளா்ச்சி 23.24 சதவீதம் பின்னடைவைச் சந்தித்தது.

பிப்ரவரி மற்றும் மாா்ச் மாதங்களில் காணப்பட்ட கணிசமான பாதிப்புகளால் நான்காம் காலாண்டில் மருந்துப் பொருள்களின் ஏற்றுமதியானது 2.97 சதவீத பின்னடைவு வளா்ச்சியை சந்தித்தது.

மத்திய அரசு, மருந்துப் பொருள்களின் ஏற்றுமதியை 2,200 கோடி டாலராக (ரூ.1.65 லட்சம் கோடி)அதிகரிக்க இலக்கு நிா்ணயித்து அதற்கான திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தி வந்தது. இந்த நிலையில், சென்ற நிதியாண்டில் மருந்து ஏற்றுமதியானது 2,058 கோடி டாலா் அளவுக்கே இருந்தது. முந்தைய 2018-19 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது கடந்த நிதியாண்டில் இத்துறையின் ஏற்றுமதி 7.57 சதவீத வளா்ச்சியை எட்டிய போதிலும், கரோனா பாதிப்பு இலக்கை தவறவிட முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என அந்த கவுன்சில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT