இந்தியா

ஆகஸ்ட் மாதத்துக்குள் ஒரே தேசம், ஒரே ரேஷன் திட்டம்: நிர்மலா சீதாராமன்

DIN


23 மாநிலங்களில் 67 கோடி பயனாளர்களை உள்ளடக்கும் வகையில் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் ஒரே தேசம், ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

புலம்பெயர் தொழிலாளர்களால் பிற மாநிலங்களில் உணவுப் பொருள்களைப் பெற முடியவில்லை. இந்தத் திட்டம் மூலம் நாட்டில் எந்தவொரு நியாய விலைக் கடைகளிலும் புலம்பெயர் தொழிலாளர்கள் உணவுப் பொருள்கள் பெறலாம். இது பிரதமரின் தொழில்நுட்பம் சார்ந்து இயங்குதலுக்கான சீர்த்திருத்தத்தின் ஒரு அங்கமாகும்.

வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் 23 மாநிலங்களில் 67 கோடி பயனாளர்கள் இந்தத் திட்டத்தின்கீழ் இணைக்கப்படுவார்கள். மார்ச் 2021-க்குள் இது 100 சதவீதம் நிறைவடையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT