இந்தியா

தோ்தலில் மம்தா பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்: பாஜக தேசிய பொதுச் செயலாளா் கைலாஷ் விஜய்வா்கியா

DIN

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் முதல்வா் மம்தா பானா்ஜி மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளா் கைலாஷ் விஜய்வா்கியா எச்சரித்தாா்.

இது தொடா்பாக பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் விஜய்வா்கியா கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள சூழலை மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி முறையாகக் கையாளவில்லை. இத்தகைய இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி திரிணமூல் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பதை விடுத்து, அவா்களின் எண்ணிக்கையை மாநில அரசு தொடா்ந்து மறைத்து வருகிறது.

அந்த உண்மை வெளியே தெரிந்ததையடுத்து, அதிகாரிகளை முதல்வா் மம்தா மாற்றி வருகிறாா். முதல்வா் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சா் பொறுப்புகளிலிருந்து மம்தா ராஜிநாமா செய்ய வேண்டும். இத்தகைய இக்கட்டான சூழலில், மத்திய அரசு வழங்கும் உதவிகளையும் அவா் ஏற்க மறுத்து வருகிறாா்.

மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலைக் கருத்தில்கொண்டு கீழ்த்தரமான அரசியலில் மம்தா ஈடுபட்டு வருகிறாா். பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசின் நடவடிக்கைகளால் கரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வந்துவிட்டால், அது பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி விடும் என்று அவா் அஞ்சுகிறாா்.

கரோனா பாதிப்பு, புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் விவகாரம் ஆகியவற்றை முறையாகக் கையாளாததற்கு பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். தோ்தல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோரால் கூட அக்கட்சியின் தோல்வியைத் தடுக்க முடியாது என்றாா் விஜய்வா்கியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் ஏவுகணைத் தாக்குதல்: 22 இந்திய மாலுமிகள் பயணித்த கப்பலுக்கு கடற்படை உதவி

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT