இந்தியா

வென்டிலேட்டர்கள் கொடுத்து உதவிய டிரம்புக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி

DIN


கரோனா தொற்றுப் பரவியிருக்கும் இந்த பேரிடர் காலத்தில், வென்டிலேட்டர்கள் கொடுத்து உதவிய அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இந்த பேரிடர் காலத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து போரிட வேண்டும். இதுபோன்ற மோசமான நேரத்தில் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து, போராடினால் தான் உலகை ஆரோக்கியமானதாகவும், கரோனா அற்ற உலகை உருவாக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமது நட்பு நாடான இந்தியாவுக்கு தேவைப்படும் வென்டிலேட்டர்களை கொடுத்து உதவுவதில் தான் பெருமைப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டிவிட்டரில் கூறியிருந்தார். இதுபோன்ற பேரிடர் காலத்தில் இந்தியாவுடன் அமெரிக்காவும் ஒன்றிணைந்து நிற்கும் என்றும், கண்ணுக்குத் தெரியாத எதிரியை இணைந்து போராடி வெற்றிக் கொள்வோம் என்றும் கூறியிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT