முகப்பு
இந்தியா

மாநிலங்கள் கடன் பெறும் வரம்பு உயர்வு: கேரள அரசு வரவேற்பு

​மாநிலங்கள் கடன் பெறும் வரம்பை 3-இல் இருந்து 5 சதவீதமாக உயர்த்தியதற்கு கேரள நிதித் துறை அமைச்சர் தாமஸ் ஐசக் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:39 PM
கோப்புப்படம்
பகிர்:


மாநிலங்கள் கடன் பெறும் வரம்பை 3-இல் இருந்து 5 சதவீதமாக உயர்த்தியதற்கு கேரள நிதித் துறை அமைச்சர் தாமஸ் ஐசக் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

'சுயசார்பு இந்தியா' திட்டத்தின் கடைசி கட்ட அறிவிப்புகளை மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டார். அப்போது மாநிலங்கள் கடன் பெறும் வரம்பை 3-இல் இருந்து 5 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்தார். மத்திய அரசின் இந்த அறிவிப்பை வரவேற்பதாக கேரள நிதித் துறை அமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இதுபற்றி பேசியதாவது:

"மாநிலங்களின் கடன் பெறும் வரம்பை உயர்த்துமாறு முதலில் கேரள முதல்வர் பினராயி விஜயன்தான் கோரிக்கை வைத்தார். இந்த அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் கேரளத்துக்கு சுமார் ரூ. 39,000 கோடி வருவாய் இழப்பு. தற்போது கடன் பெறும் வரம்பு 5 சதவீதமாக உயர்த்தியிருப்பதன்மூலம், எங்களுக்கு ரூ. 18,087 வரை கிடைக்கும். இது எங்களுடைய இழப்பில் வெறும் பாதிதான். எனவே, மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி முழுவதுமாக வழங்கப்பட வேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்களுக்கான புதிய அறிவிப்புகள் கட்டாயமாக்கப்பட்டால், நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம். மின் துறையில் செய்யப்பட்டுள்ள சீர்த்திருத்தங்களையும் நாங்கள் எதிர்க்கிறோம். கரோனா தொற்று காலத்தைப் பயன்படுத்தி, மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களைக் கட்டவிழ்த்துவிடுவது துரதிருஷ்டவசமானது. இதை செயல்படுத்துவதற்கு முன்பு மத்திய அரசு மாநிலங்களுடன் ஆலோசனை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம். இதுபற்றி விவாதிக்கப்படும்."

முழு கட்டுரையைப் படிக்க →