முகப்பு
இந்தியா

நாடு முழுவதும் மே 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு?

நாடு முழுவதும் மே 31-ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டிக்குமாறு மத்திய, மாநில அரசுகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:39 PM
பகிர்:


நாடு முழுவதும் மே 31-ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டிக்குமாறு மத்திய, மாநில அரசுகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 3-ஆம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்த பொது முடக்கம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

இந்த நிலையில், கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மே 31-ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், பொருளாதார நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, தேவையான வழிகாட்டுதல்களை வழங்கிடுமாறு தேசிய செயலாக்கக் குழுவையும் தேதிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

எனவே, இந்த அறிவுறுத்தலின் அடிப்படையில் பொது முடக்கம் நீட்டிப்பு பற்றி மத்திய அரசு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கெனவே, மே 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 4-ஆம் கட்ட பொது முடக்கம் முதல் மூன்று பொது முடக்கங்களைக் காட்டிலும் முற்றிலும் மாறானதாக இருக்கும் என்று சமிக்ஞை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →