புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 1000 பேருந்துகள்: காங்கிரஸ் உதவியை ஏற்றது உ.பி பாஜக அரசு
புலம்பெயர் தொழிலாளர்கள் மாநிலம் வந்து சேருவதற்கு 1000 பேருந்துகள் வழங்குவதாகக் கூறிய காங்கிரஸின் உதவியை உ.பி பாஜக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
லக்னௌ: புலம்பெயர் தொழிலாளர்கள் மாநிலம் வந்து சேருவதற்கு 1000 பேருந்துகள் வழங்குவதாகக் கூறிய காங்கிரஸின் உதவியை உ.பி பாஜக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
கரோனா ஊரடங்கின் காரணமாக நாட்டின் பலபகுதிகளில் இருந்தும் புலம்பெயர் தொழிலாளிகள் தங்களது சொந்த ஊருக்கு காலநடையாகத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களில் பெரும்பாலானோர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், புலம்பெயர் தொழிலாளர்கள் மாநிலம் வந்து சேருவதற்கு 1000 பேருந்துகள் வழங்கத் தயாராக இருப்பதாக செயலாலளர் பிரியங்கா காந்தி கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
Advertisement
இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் மாநிலம் வந்து சேருவதற்கு 1000 பேருந்துகள் வழங்குவதாகக் கூறிய காங்கிரஸின் உதவியை உ.பி பாஜக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்தத் தகவலை மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜய் குமார் லல்லு திங்களன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.
அதேசமயம் காங்கிரஸின் உதவியை அரசு ஏற்றுக்கொள்வதற்காக, மாநில உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் அவஸ்தி கையெழுத்திட்ட கடிதம் பிரியங்கா காந்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.