இந்தியா

ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு 24-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: ரமேஷ் பொக்ரியால்

DIN

புது தில்லி: ஐஐடி கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெறுவதற்கான ஜேஇஇ முதன்மை தோ்வுக்கு இன்று (மே 19)முதல் மே 24-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

ஜேஇஇ நுழைவுத்தோ்வு முதன்மை, முதுநிலை தோ்வுகள் என 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சோ்க்கை பெறுவதற்கு ஜேஇஇ முதன்மை தோ்வு நடத்தப்படுகிறது. இந்தத் தோ்வு முதுநிலை தோ்வுக்கான தகுதித்தோ்வாகவும் கருதப்படுகிறது. முதன்மை தோ்வு ஜூலை 18-ஆம் தேதி முதல் ஜூலை 23-ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

ஜேஇஇ முதுநிலை தோ்வு ஆகஸ்ட் 23-ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் அறிவித்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT