இந்தியா

ஜே.இ.இ. முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் கால அவகாசம்: அமைச்சர் தகவல்

DIN

பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வான ஜே.இ.இ முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேசிய தேர்வு முகமை மீண்டும் கால அவகாசம் வழங்கியுள்ளது.

கரோனா எதிரொலியாக ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் உள்ள இந்திய  மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில், ஜேஇஇ- முதன்மைத் தேர்வு விண்ணப்பிக்கலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, மே 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி மாலை 5 மணி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பக்  கட்டணம் செலுத்த கடைசி நாள் மே 24, இரவு 11.50 என்றும் தெரிவித்தார்.

'வெளிநாடுகளில் பொறியியல் பயின்ற பல்வேறு மாணவர்கள் கரோனா வைரஸ் தொற்று காரணமாக தங்களது படிப்பை கைவிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும், அவர்கள் தற்போது இந்தியாவில் பயில ஆர்வம் காட்டுகின்றனர். எனவே, அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் பொருட்டு தேசிய தேர்வு முகமை, மெயின்ஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கியுள்ளது. மேலும், வேறு காரணங்களால் முன்னதாக விண்ணப்பிக்க முடியாத மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்' என்றார். 

மேலும், நாடு முழுவதும் ஜேஇஇ தேர்வு ஜூலை 18 முதல் 23 வரை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை முன்னதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT