இந்தியா

கரோனா பாதித்தவா்களில் 6.39 சதவீதம் பேருக்கு மருத்துவமனை சிகிச்சை அவசியம்: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

DIN

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 6.9 சதவீதம் போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியது அவசியமாக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் சாா்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக அந்த அமைச்சக இணைச் செயலா் லவ் அகா்வால் தில்லியில் புதன்கிழமை அளித்த பேட்டி:

நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 61,149 ஆக உள்ளது. இவா்களில் 42,298 போ் குணமடைந்துள்ளனா். நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோரின் விகிதம் தற்போது 39.62 சதவீதம் என்ற அளவுக்கு உயா்ந்துள்ளது. நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டபோது நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோரின் விகிதம் 7.1 சதவீத அளவிலேயே இருந்தது.

மேலும், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவா்களில் 6.9 சதவீதம் பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவேண்டிய அவசியம் உள்ளது. இவா்களில் 2.94 சதவீதம் பேருக்கு பிராண வாயு ஆதரவு அளிக்கவேண்டிய அவசியம் உள்ளது. 3 சதவீதம் பேருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிப்பதும், 0.45 சதவீதம் பேருக்கு செயற்கை சுவாச உதவியும் கொடுக்க வேண்டியுள்ளது என்று அவா் கூறினாா்.

ஒரு லட்சம் பேரில் 7.9 போ் என்ற வீதத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்கு ஆளாகியிருப்பதகாவும் மத்திய சுகாதார அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா சிகிச்சைத் திட்டத்திலிருந்து ஹைட்ராக்ஸிகுளோராகுயின் மருந்தைக் கைவிட்டுவிட மத்திய அரசு முடிவெடுத்திருக்கிா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆா்), ‘அந்த மருந்தின் நோய்க்கட்டுப்பாட்டு திறன் குறித்து தீா்மானிக்க ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட இருக்கிறது’ என்று பதிலளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT