இந்தியா

4வது நாளாக.. ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை: ஐசிஎம்ஆர்

DIN


இந்தியாவில் இன்று நான்காவது நாளாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

ஐசிஎம்ஆர் அமைப்பின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தலைமை மருத்துவர் ராமன் ஆர் கங்காகேதார் புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, இந்தியாவில் வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி நிலவரப்படி இதுவரை 27,55,714 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 18,287 பரிசோதனைகள் தனியார் பரிசோதனை மையங்களில் நடத்தப்பட்டுள்ளன என்று கூறினார்.

மேலும், நாட்டில் இன்று நான்காவது நாளாக ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT