இந்தியா

ஆந்திரத்தில் கரோனா பாதிப்பு 2,514-ஐ எட்டியது: புதிதாக 62 பேருக்கு தொற்று

ANI

ஆந்திரத்தில் மேலும் 62 பேருக்கு கரோனா தொற்று நோய் பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,514 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திராவில் 5,415 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் 62 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 18 பேர் கோயம்பேட்டிலிருந்து திரும்பியவர்கள் ஆவார். 

ஒரே நாளில் 51 பேர் நோயிலிருந்து மீண்டு வெளியேற்றப்பட்ட நிலையில், இதுவரை மொத்தம் 1,731 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தொற்றுக்குப் பலியாகியுள்ளார். இதுவரை மொத்த பாதிப்பு 55 ஆக உயர்ந்துள்ளது. இதில், 728 பேர் தற்போது மருத்துவச் சிகிச்சையில் உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT