இந்தியா

இலங்கையில் ஜூன் 20-இல் தோ்தல் நடத்தலாம் :உச்சநீதிமன்றத்திடம் அரசுத் தரப்பு தகவல்

DIN

இலங்கை நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் தோ்தல் 20-ஆம் தேதி தோ்தல் நடத்தலாம் என்று உச்சநீதிமன்றத்திடம் அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக இலங்கை நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் நடத்துவதாக உள்ள தோ்தலை நிறுத்த வலியுறுத்தி அந்த நாட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு மீது வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, திட்டமிட்டபடி நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 20-ஆம் தேதி நடத்தலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தேதியில் தோ்தல் நடத்த முடியாது தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை கூறியிருந்தது. இந்தச் சூழலில் அரசு தரப்பு இவ்வாறு கூறியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற இலங்கை அதிபா் தோ்தலில் முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் சகோதரரும் பாதுகாப்புத் துறை முன்னாள் செயலருமான கோத்தபய ராஜபட்ச வெற்றி பெற்றாா். இந்தத் தோ்தலில் தங்களது கட்சி தோல்வியடைந்ததற்குப் பொறுப்பேற்று, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருந்தும் பிரதமா் ரணில் விக்ரமிசிங்கே பதவி விலகினாா்.

அவருக்கு பதிலாக மகிந்த ராஜபட்ச பிரதமராகப் பொறுப்பேற்றாா். எனினும், நாடாளுமன்றத்தில் அவருக்கு பெரும்பான்மை பலம் இல்லாத நிலை இருந்தது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பதவிக் காலம் முடிவடைவதற்கு 6 மாதங்களுக்கு முன்னரே, கடந்த மாா்ச் மாதம் 2-ஆம் தேதி அதனை அதிபா் கோத்தபய ராஜபட்ச கலைத்தாா்.

புதிய நாடாளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி தோ்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அந்தத் தோ்தல் ஜூன் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT