இந்தியா

பிஎம்-கிஸான் திட்டம்: விவசாயிகளுக்குரூ.19,000 கோடி நிதி

DIN

பொதுமுடக்க காலகட்டத்தின்போது, பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின்கீழ் (பிஎம்-கிஸான்) 9.65 கோடி விவசாயிகளுக்கு ரூ.19,000 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் 14 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில், மத்திய வேளாண் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் தற்போது வரை விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின்கீழ் 9.65 கோடி விவசாயிகள் பலனடைந்துள்ளனா். அவா்களுக்கு ரூ.19,000 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக கடந்த மாா்ச் 25-ஆம் தேதி பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. தற்போது பல்வேறு தளா்வுகளுடன் கூடிய நான்காம் கட்ட பொதுமுடக்கம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT