இந்தியா

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப தளர்வுகள்: மத்திய அரசு அறிவிப்பு

DIN

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. 

'வெளிநாடு வாழ் இந்தியக் குடிமகன்' என்றும் ஓசிஐ கார்டு வைத்திருப்பவர்கள் இந்தியா திரும்ப, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்த தளர்வுகள்:

► வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பிறந்த குழந்தைகள்(18 வயதுக்குக் கீழ்) இந்தியா வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

► குடும்பத்தில் இறப்பு உள்ளிட்ட அவசர சூழ்நிலை காரணமாக இந்தியா வர விரும்புவோருக்கு அனுமதி. 

► கணவன் - மனைவி இருவரில் யாரேனும் ஒருவர் இந்தியராக இருந்து மற்றொருவர் ஓசிஐ கார்டு வைத்திருந்தால் இருந்தால் அவர் நிரந்தரமாக இந்தியாவில் இருக்க அனுமதி. 

► இந்தியர்களுக்குப் பிறந்து, வெளிநாட்டில் பயிலும் மாணவர்களும்(18 வயதுக்கு மேல்) இந்தியாவுக்கு வரலாம், அவர்களது பெற்றோர்கள் கண்டிப்பாக இந்தியாவில் இருக்க வேண்டும்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், ஓசிஐ கார்டு வைத்திருக்கும் இந்தியர்களும் தாயகம் திரும்பும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் மேற்குறிப்பிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

ஆடை சுதந்திரம் கோரியது குற்றமா? செளதியில் பெண்ணுரிமைப் போராளிக்குச் சிறை: அமைப்புகள் கண்டனம்!

"வாக்கு சதவிகித விவரங்களில் சந்தேகம்!”: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT