இந்தியா

போக்குவரத்துக்குத் தயாராகும் திருப்பதி விமான நிலையம்

DIN

திருப்பதி விமான நிலையம் பொது முடக்கத்துக்குப் பின் போக்குவரத்துக்குத் தயாராகி வருகிறது.

நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக விமானம், ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டன. நாடு தழுவிய பொது முடக்கம் தற்போது சில தளா்வுகளுடன் 4-ஆம் கட்டமாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வரும் 25-ஆம் தேதி முதல் விமான போக்குவரத்தைத் தொடங்க ஆயத்தப் பணிகள் நடந்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல், திருப்பதியில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்திலும் அதிகாரிகள் போக்குவரத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனா். பயணிகளுக்கு மட்டுமல்லாமல் அவா்கள் கொண்டு வரும் உடைமைகளுக்கும் கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதத்தில் வளையங்களும் வரையப்பட்டு வருகிறது. 2 மாத கால இடைவெளிக்குப் பின், வரும் 25-ஆம் தேதி முதல் திருப்பதி விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT