இந்தியா

எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மற்றொரு ஊழியரும் கரோனாவுக்கு பலி

IANS


ஏற்கனவே தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் உணவக ஊழியர் கரோனா பாதித்து பலியான நிலையில், இன்று மருத்துவமனை ஊழியர் ஒருவர் கரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவின் துப்புரவுப் பணி கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் ஹிராலால்.

இது பற்றி மருத்துவமனை ஊழியர்கள் சிலர் கூறுகையில், அவர் பணி நேரத்தின் போது மிகவும் எச்சரிக்கையாகவே செயல்படுவார். அரசு அறிவுறுத்திய அனைத்து சுகாதாரப் பணிகளையும் அவர் மேற்கொண்டார். ஆனாலும் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது. மருத்துவமனையில் பணியாற்றும் போது எப்போதும் அவரைப் பற்றி அவர் கவலைப்பட்டதே இல்லை. நோயாளிகளின் நலனையே கவனித்து வந்தார், செவிலியர்கள் முதல் மருத்துவர்கள் வரை அனைவர் மீதும் அவர் அன்பு செலுத்தினார் என்று தெரிவித்தனர்.

அவரது உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. நடைமுறைகள் முடிந்ததும் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

ஏற்கனவே, எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்களுக்கான உணவகத்தில் பணியாற்றி வந்த ஊழியர் கரோனா பாதித்து மரணம் அடைந்த நிலையில், தற்போது ஊழியர் ஒருவரும் மரணம் அடைந்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழில்முனைவோா் பாடத்திட்ட விளக்கக் கூட்டம்

மாரியம்மன், பாலமுருகன் கோயில் திருவிழா

தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு: போதையில் இருந்த ஓட்டுநா் கைது

ஆம்னி பேருந்தில் பெண் ஐடி ஊழியா் உயிரிழப்பு

கோவை -மங்களூரு இடையே சிறப்பு ரயில்

SCROLL FOR NEXT