முகப்பு
இந்தியா

புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றி வந்த பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்

புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 10 பேர் காயமடைந்தார்கள்.

Updated On : 26 மே, 2020 at 5:14 PM
பேருந்து விபத்து
பகிர்:

ஸ்ரீகாகுளம்: புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 10 பேர் காயமடைந்தார்கள்.

இந்த விபத்து தொடர்பாக ஸ்ரீகாகுளம் மாவட்டம் மண்டாசா பகுதி காவல் நிலைய துணை ஆய்வாளர் பிரசாத் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

புலம் பெயர் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் ஓட்டுநர் மற்றும் கிளீனர் தவிர 41 பேர் பயணம் செய்தனர். இந்தப் பேருந்தானது செவ்வாயன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள மண்டாசா பகுதிக்கு வந்த போது அதிக வேகத்தின் காரணமாக கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

Advertisement

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் காயம் அடைந்தனர். வேறு யாருக்கும் படுகாயங்கள் ஏற்படவில்லை. அவர்கள் உடனடியாக அருகிலுள்ள பலாசா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். விபத்து ஏற்படுத்திய பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் தப்பித்து ஓடிவிட்டனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.