வெட்டுக்கிளிகளின் தாக்குதல் 
இந்தியா

வயல்களுக்கு படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: விரட்ட ம.பி விவசாயிகளின் புது ‘டெக்னிக்’

தங்களது வயல்களில் அதிகரித்து வரும் வெட்டுக்கிளிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த, மத்தியப் பிரதேச விவசாயிகள் புதிய வழிமுறை ஒன்றைக் கையாண்டு வருகின்றனர்.

IANS

செஹோர்: தங்களது வயல்களில் அதிகரித்து வரும் வெட்டுக்கிளிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த, மத்தியப் பிரதேச விவசாயிகள் புதிய வழிமுறை ஒன்றைக் கையாண்டு வருகின்றனர்.

நமது அண்டை நாடான பாகிஸ்தானில் சில மாதங்களுக்கு முன்னால் வயல்வெளிகளில் வெட்டுக்கிளிகளின் ஆக்கிரமிப்பு அதிக அளவில் இருந்தது. அத்துடன் விளைச்சலுக்கும் அவை கடுமையான் சேதத்தை உண்டாக்கின. தற்போது பாகிஸ்தானுடன் எல்லைப்பகுதியில் இருக்கும் வடமாநிலங்களில் வயல்வெளிகளில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்தத் தாக்கமானது ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் குறிப்பாக செஹோர் மாவட்டத்தில் புத்னி மற்றும் நஸ்ருலாகஞ்ச் ஆகிய பகுதிகளில் தாக்குதல் அதிகமாக இருக்கிறது.   

இந்நிலையில் அதிகரித்து வரும் வெட்டுக்கிளிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த, செஹோர் மாவட்ட விவசாயிகள் புதிய வழிமுறை ஒன்றைக் கையாண்டு வருகின்றனர்.

அதன்படி அவர்கள் கூட்டமாகக் கூடி பாத்திரங்களைத் தட்டி ஓசை  எழுப்புவதால் வெட்டுக்கிளிகளின் தாக்குதல்களை தடுக்கிறார்கள். அத்துடன் பயிர்கள் மற்றும் மரங்களில் கிருமிநாசினிக் கரைசல்களைத் தெளிப்பது உள்ளிட்ட வழக்கமான செயல்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.                  

அவர்களது இந்த செயல்பாடுகளை மாநில வேளாண் விஞ்ஞானிகள் வெகுவாகப் பாராட்டுவதோடு தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் அபிஷேக் சர்மா..! இஷான், பிரெவிஸ், ஃபர்ஹான் முன்னேற்றம்!

நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

SCROLL FOR NEXT