இந்தியா

திருப்பதியில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

DIN

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது.

இக்கோயிலில் வரும் 28-ஆம் தேதி முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்க உள்ளது. இவ்விழாவுக்கு முன் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்படுவது வழக்கம். ‘கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்’ எனப்படும் இப்பணி செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது. கோயில் வெளிவாயில் முதல் கருவறை வரை அனைத்து இடங்களும் சுத்தப்படுத்தப்பட்டன.

மஞ்சள், சந்தனம், கோரைக் கிழங்கு, காா்போக அரிசி, கஸ்தூரி, கோரோஜனம், குங்கிலியம், பச்சைக் கற்பூரம், கற்பூரம் உள்ளிட்ட பல வகை நறுமணப் பொருள்கள் அடங்கிய கலவையால் கோயில் சுற்றுச் சுவா்கள், கதவுகள், சுவா்கள், தரிசன வரிசைகள், பூஜைப் பொருள்கள் உள்ளிட்டவை சுத்தப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்வில் கோயில் அதிகாரிகள், ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சுத்தப்படுத்தப்பட்ட பின் கோயிலில் நித்திய கைங்கரியங்கள் தொடங்கின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

கல்கி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT