முகப்பு
இந்தியா

இந்தியாவில் 82 லட்சத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

Updated On : 2 நவம்பர், 2020 at 10:08 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:16 PM

நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது: இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 45,230 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 82,29,313-ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றுக்கு மேலும் 496 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 1,22,607-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 53,285 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இத்துடன் மொத்தம் 74,91,513 பேர் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து 4-ஆவது நாளாக 6 லட்சத்துக்கு கீழ் உள்ளது. தற்போது 5,61,908 பேர் சிகிச்சையில் உள்ளனர். 
"நவ.1 வரை நாடு முழுவதும் 11,07,43,103 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அதில் நேற்று மட்டும் 8,55,800 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அக்டோபர் முதல் வாரத்திலிருந்து தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சீராக குறைந்து வந்துள்ளது. செப்டம்பரில் 26,21,418 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அக்டோபரில் பாதிப்பு சுமார் 30 சதவீதம் குறைந்து 18,71,498-ஆக உள்ளது. இந்த எண்ணிக்கையானது இதுவரை நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 22.87 சதவீதமாகும். அதேபோல் அக்டோபரில் 23,433 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். 
இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது 20 லட்சத்தை ஆக. 7-ஆம் தேதியும், 30 லட்சத்தை ஆக. 23-ஆம் தேதியும், 40 லட்சத்தை செப். 5-ஆம் தேதியும், 50 லட்சத்தை செப். 16-ஆம் தேதியும், 60 லட்சத்தை செப். 28-ஆம் தேதியும், 70 லட்சத்தை அக். 11-ஆம் தேதியும், 80 லட்சத்தை அக். 29-ஆம் தேதியும் கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.