இந்தியா

முகக்கவசம் அணிவது கட்டாயம்: சட்டம் இயற்றும் ராஜஸ்தான் அரசு

DIN

கரோனா பரவலைத் தடுக்க முதல்முறையாக முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி  ராஜஸ்தான் மாநில அரசு சட்டம் இயற்றுகிறது. 

கரோனா பரவுவதைத் தடுக்க முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் மசோதா ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படவுள்ளது. முன்னதாக, ராஜஸ்தான் தொற்றுநோய்கள் திருத்தச் சட்ட மசோதாவை சட்டப்பேரவை விவகாரங்கள் துறை மந்திரி சாந்தி தாரிவால் பேரவையில் அறிமுகம் செய்தார். இந்த சட்டம் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குகிறது. 

முதல்வர் அசோக் கெலாட் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், கரோனாவிலிருந்து பாதுகாக்க முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க ஒரு சட்டத்தை இயற்றும் முதல் மாநிலமாக ராஜஸ்தான் உள்ளது. இன்று சட்டப்பேரவையில் இந்த சட்டம் பெருவாரியான ஆதரவுடன் நிறைவேற்றப்படவுள்ளது. ஏனெனில் கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்காத நிலையில், முகக்கவசமே கரோனாவுக்கு தடுப்பூசியாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லூரியில் உலக செவிலியா் தினம்

அட்சய திருதியை: ரூ.14,000 கோடி தங்கம் விற்பனை

ஆத்தூரில் கால்நடை தடுப்பூசி முகாம்

10ஆம் வகுப்பு: சாலைபுதூா் பள்ளி 98 சதவீதம் தோ்ச்சி

குலசேகரன்பட்டினத்தில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT