நவ.6-ம் தேதி இந்திய-இத்தாலி பிரதமர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு
இந்திய-இத்தாலி பிரதமர்கள் பங்கேற்கும் மெய்நிகர் உச்சி மாநாடு நவம்பர் 6ஆம் தேதி நடக்கவுள்ளதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இந்திய-இத்தாலி பிரதமர்கள் பங்கேற்கும் மெய்நிகர் உச்சி மாநாடு நவம்பர் 6ஆம் தேதி நடக்கவுள்ளதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்தியில்,
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இத்தாலி பிரதமர் பேராசிரியர் கியூசெப் கோண்டே கலந்து கொள்ளும் மெய்நிகர் உச்சி மாநாடு நவம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த மாநாடு இருதரப்பின் உறவை மேம்படுத்தவும், உலகளாவிய பிரச்னைகள் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொள்ளவும் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.