இந்தியா

ஒடிசாவில் கரோனாவுக்கு 1,494 பேர் பாதிப்பு: பலி 15

PTI

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,494 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,494 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,98,769 ஆக அதிகரித்துள்ளது. 

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில், 867 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்தும், மேலும் உள்ளூரிலும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

கரோனா தொற்றால் 13,789 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை தொற்று பாதித்து குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 2,83,553-ஆக அதிகரித்துள்ளது. 

புதிதாக 15 பேர் பலியாகியுள்ள நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,494-ஆக அதிகரித்துள்ளது. 

ஒடிசா மாநிலத்தில் இதுவரை 48.38 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 51,098 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைகாசி மாதப் பலன்கள்: 12 ராசிக்கும்!

கொதிக்கிற வெய்யிலில்... ஷிவானி!

சபரிமலை கோயில் இன்று மாலை திறப்பு!

பிரதமரின் வேட்புமனு தாக்கலில் கலந்து கொண்ட அன்புமணி, ஜி.கே.வாசன்!

சுட்டெரிக்கும் வெயில்! -திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு நேரக் கட்டுப்பாடு அமல்

SCROLL FOR NEXT