முகப்பு
இந்தியா

கரோனாவை எதிர்கொள்வதில் வளர்ந்த நாடுகளை விடவும் இந்தியா சிறப்பாக செயல்பட்டது: அமைச்சர் ஹர்ஷ வர்தன்

கரோனாவை எதிர்கொள்வதில் எந்தவொரு வளர்ந்த நாட்டையும்விட இந்தியா சிறப்பாக செயல்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார். 

Updated On : 9 நவம்பர், 2020 at 4:01 PM
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:20 PM

கரோனாவை எதிர்கொள்வதில் எந்தவொரு வளர்ந்த நாட்டையும்விடவும்  இந்தியா சிறப்பாக செயல்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார். 

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்தன், ஆந்திரம், அசாம், ஹரியாணா, இமாசலப் பிரதேசம், கேரளம், பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் மேற்கு வங்க சுகாதார அமைச்சர்களுடன் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று காணொலி மூலமாகப் பேசினார். 

அப்போது அவர், கரோனாவை கட்டுப்படுத்துவதில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட்டன. இந்த 10 மாத பயணத்தில் நாம் பல நிலைகளைக் கடந்திருக்கிறோம். 

Advertisement

பிரதமர் மோடியின் தலைமையில் பொதுமுடக்க விதிகளை நாட்டு மக்கள் அனைவரும் பின்பற்றினர். கரோனா விஷயத்தில் நாட்டின் செயல்திறனை ஆராய்ந்தால், உலகின் பல வளர்ந்த நாடுகளைவிடவும் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது. இந்தியாவின் மீட்பு விகிதம் இன்று காலை நிலவரப்படி 92.56 சதவீதத்தை எட்டியுள்ளது.

ஓரிரண்டு மாதங்களுக்கு முன்பு கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்தது. தற்போது 5 லட்சம் பேர் மட்டுமே கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலர் குணமடைந்து வருகின்றனர். 

வரும் ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் தடுப்பூசி பெறலாம் என்ற நம்பிக்கை உள்ளது. தடுப்பூசி கிடைத்த பின்னர் அனைத்து மக்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று பேசியுள்ளார். 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 45,903 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் மொத்த பாதிப்பு 85,53,657 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 490 பேர் உள்பட இறப்பு எண்ணிக்கை 1,26,611 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.