இந்தியா

பிகாரில் 14 தொகுதிகள் முடிவு வெளியீடு: பாஜக முன்னிலை

DIN


பிகாரில் 14 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் அதிகபட்சமாக பாஜக 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

243 தொகுதிகள் கொண்ட பிகார் பேரவைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணும் பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடைய நள்ளிரவு ஆகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், 14 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பாஜக அதிகபட்சமாக 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் வி.ஐ.பி. கட்சிகள் தலா 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிகள் தலா 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

முன்னிலை நிலவரம்:

தேசிய ஜனநாயகக் கூட்டணி - 123 இடங்களில் முன்னிலை

மகா கூட்டணி - 112 இடங்களில் முன்னிலை

ஏ.ஐ.எம்.ஐ.எம். - 5 இடங்களில் முன்னிலை

பி.எஸ்.பி. - 1 இடத்தில் முன்னிலை

சுயேச்சை - 2 இடங்களில் முன்னிலை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT