முகப்பு
இந்தியா

183 தொகுதிகளின் முடிவுகள் வெளியீடு: தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை

​பிகார் பேரவைத் தேர்தலில் 183 தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:51 PM
பகிர்:


பிகார் பேரவைத் தேர்தலில் 183 தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

243 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பிகாரில் வாக்கு எண்ணும் பணி காலை முதல் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்திய அறிவிப்பாக 183 தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

முடிவுகள் அறிவிக்கப்பட்ட தொகுதிகள் எண்ணிக்கை: 183

தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை: 90 (பா.ஜ.க. -51, ஜே.டி.யு. - 32, வி.ஐ.பி. - 4, ஹெச்.ஏ.எம். - 3)

மகா கூட்டணி வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை: 86 (ஆர்.ஜே.டி. - 60, காங்கிரஸ் - 14, இடதுசாரிகள் - 12)

ஏ.ஐ.எம்.ஐ.எம். வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை: 4

பி.எஸ்.பி. வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை: 1

சுயேச்சை வெற்றி பெற்றுள்ள தொகுதி எண்ணிக்கை: 1

முழு கட்டுரையைப் படிக்க →