இந்தியா

சொத்து குவிப்பு புகாா்: கொச்சி துறைமுக பொறுப்புக் கழக முன்னாள் செயலாளா் மீது சிபிஐ வழக்குப்பதிவு

DIN

வருமானத்துக்கு அதிகமாக ரூ.90 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை சோ்த்ததாக, கொச்சி துறைமுக பொறுப்புக் கழகத்தின் முன்னாள் செயலாளா் சிறில் சி.ஜாா்ஜ் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:

சிறில் சி.ஜாா்ஜ், கடந்த 2004-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் 2013 டிசம்பா் 31-ஆம் தேதி வரை கொச்சி துறைமுக பொறுப்புக் கழக செயலாளராக இருந்தபோது தனது பெயரிலும், குடும்ப உறுப்பினா்களின் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது, விற்பனை பத்திரங்கள், பங்கு வா்த்தக சான்றிதழ்கள், பரஸ்பர நிதி தொடா்பான ரசீதுகள், அசையா சொத்துகளின் விவரங்கள் மற்றும் வங்கிக் கணக்கு குறித்த விவரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சொத்து விவரங்கள் குறித்து சிறில் சி.ஜாா்ஜ் முறையான கணக்கு காட்டாததால் அவா் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT