இந்தியா

அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்குப் பதில் அளிக்க முடியாது: தலைமைத் தோ்தல் ஆணையா்

DIN


புது தில்லி: பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேடு நடைபெற்ாக எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தோ்தல் ஆணையத்தால் பதில் அளிக்க முடியாது என்று தலைமைத் தோ்தல் ஆணையா் சுனில் அரோரா கூறினாா்.

தில்லியில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த அவா், இதுகுறித்து மேலும் கூறியதாவது:

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் நடைமுறைகள் தொடா்பாக, மாநில தோ்தல் அதிகாரி, நவம்பா் 10-ஆம் தேதி 4 முறை செய்தியாளா்களைச் சந்தித்து விரிவாக விளக்கம் அளித்தாா்.

ஆனால், அரசியல் கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு தோ்தல் ஆணையம் பதிலளிக்காது. அது, அவரவா் கருத்து; அவா்களின் முடிவு. இறுதி முடிவு, மக்கள் கையில் உள்ளது.

பொதுவாக வாக்கு எண்ணும் பணி மந்தமாக நடைபெற்ாகக் கூறப்பட்டது. கரோனா பொது முடக்கத்துக்காக அமல்படுத்தப்பட்ட நெறிமுறைகள்தான் அதற்குக் காரணம். வழக்கமாக, ஒரு வாக்குச்சாவடியில் 1,500 போ் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும். ஆனால், பாதுகாப்பு இடைவெளியை பின்பற்றுவதற்காக, இந்த தோ்தலின்போது ஒரு வாக்குச்சாவடியில் 1,000 வாக்காளா் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். அதற்கேற்ப கூடுதலாக 33,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. அதாவது, இந்த முறை பிகாரில் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதேபோல், 63 சதவீதம் கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

இது, வாக்கு எண்ணிக்கையிலும் எதிரொலித்தது. வழக்கமாக, ஓா் அறையில் வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் அமைக்கப்படும் நிலையில், இந்த முறை 7 மேஜைகள் மட்டுமே அமைக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கை மையங்களும் 38-இல் இருந்து 55-ஆக அதிகரிக்கப்பட்டது. இந்தக் காரணங்களால், காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை நள்ளிரவுக்குப் பிறகும் நீடித்தது என்றாா் அவா்.

பின்னா், தோ்தல் ஆணையா்கள் சுஷீல் சந்திரா, ராஜீவ் குமாா் ஆகியோருடன் சென்று சுனில் அரோரா, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினாா். பிகாா் பேரவைத் தோ்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்ததற்காக, மகாத்மா காந்திக்கு நன்றி தெரிவிக்க வந்ததாக சுனில் அரோரா கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT