முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,496 கரோனா; 122 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 4,496 கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 12 நவம்பர், 2020 at 8:31 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:21 PM

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 4,496 கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இன்று புதிதாக 4,496 கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,36,329 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 7,809 பேர குணமடைந்துள்ளனர். 

இதையடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 16,05,064 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும், கரோனாவுக்கு இன்று 122 பேர் பலியாகினர். இதன்மூலம் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 45,682 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 84,627 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Advertisement

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.