குஜராத்: பிளாஸ்டிக் ஆலையில் தீ விபத்து (கோப்புப்படம்) 
இந்தியா

குஜராத்: பிளாஸ்டிக் ஆலையில் தீ விபத்து

குஜராத்தில் பிளாஸ்டிக் தயாரிப்பு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கரும் புகையுடன் கொளுந்துவிட்டு எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

DIN

ஆமதாபாத்: குஜராத்தில் பிளாஸ்டிக் தயாரிப்பு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கரும் புகையுடன் கொளுந்துவிட்டு எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

குஜராத் மாநிலம் வல்சாத் பகுதியில் பிளாஸ்டிக் உற்பத்தி பிரிவு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்த 8 தீயணைப்பு வீரர்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தீபாவளி விடுமுறையையொட்டி ஆலைக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததால், உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டது. எனினும் தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT