முகப்பு
இந்தியா

தாராவியில் ஒருவருக்கு மட்டுமே கரோனா

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் வெறும் ஒருவருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 15 நவம்பர், 2020 at 7:12 PM
தாராவி
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:22 PM


ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் வெறும் ஒருவருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,544 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 3,065 பேர் குணமடைந்துள்ளனர். 60 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய நிலவரப்படி நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 84,918 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 16,15,379 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 45,974 ஆக உள்ளது.

Advertisement

தாராவி:

தாராவியில் வெறும் ஒருவருக்கு மட்டுமே கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,620 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3,282 பேர் ஏற்கெனவே நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இதன்மூலம், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் வெறும் 27 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.